| Notice Board |
07/05/2013 -- - - -JTO போட்டித் தேர்விற்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்- - - - -
நிர்வாகத்திடம் நமது மாநில செயலாளர் சகோ.A.சுகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க 02.06.2013 அன்று நடைபெற உள்ள JTO போட்டி தேர்விற்கு நமது SC/ST சகோதரர்களுக்கு 20.05.2013 முதல் 22.05.2013 வரை தாம்பரம் DTTC (Training centre) பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது, தகுதி உள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடையும்படி கேட்டுக் கொள்கிறோம்.
|
01/05/2013 - - - - - மே தின வாழ்த்துக்கள்- - - - - - - - -
உலகமெங்கும் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு இந்த மே தினத்தில் SEWA BSNL - ன் சார்பாக வீர வணக்கம் செலுத்துகிறோம்,
தொழிலாளர்களின் பல பிரச்சனைகளுக்கு சட்டத்தின் மூலம் தீர்வுகண்ட உலக தலைவர்களுக்கெல்லாம் தலைவரான நமது தந்தை பாபா சாகேப் Dr.B.R. அம்பேத்கர் அவர்களுக்கு இந்த நாளில் சிரம் தாழ்ந்து மரியாதை செலுத்துவோம்.
View Attachment
|
29/04/2013 -- - -27.04.2013, 2 வது விருதுநகர் மாவட்ட மாநாடு, தமிழ் மாநிலம் - - - - -
27.04.2013 அன்று SEWA BSNL- ன் 2-வது விருதுநகர் மாவட்ட மாநாடு, விருதுநகர் தொலைபேசி இணைப்பக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பை ஏற்று நமது அகில இந்திய பொதுச்செயலாளர் அவர்கள் கலந்து கொண்டது மாநாட்டிற்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது, மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய பொதுச்செயலாளர், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தினார். சென்னை மாநிலச் சங்கத்தின் சார்பாக மாநில துணைத் தலைவர். V.ராஜேந்திரன், மாநில துணைப் பொருளாளர் S.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர், புதிய நிர்வாகிகளை நமது சென்னை மாநிலச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
|
23/04/2013 - - -- - - Telecom Mechanic போட்டித் தேர்விற்கு கல்வி தகுதியில் சலுகை குறித்து - - - - - - - -
நடைபெற உள்ள Telecom Mechanic போட்டித் தேர்விற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி என்பதிலிருந்து விலக்கு அளித்து,சலுகை வழங்க வேண்டும் என்று நமது அகில இந்திய பொதுச்செயலாளர் Director (Establishment) யிடம் கோரிக்கை வைத்துள்ளார், Director (HRD) வுடன் ஆலோசித்து சலுகை வழங்குவதாக Director (Establishment) உறுதியளித்துள்ளார்.
|
20/04/2013 - - - - - - - TEPU சங்கத்தின் அகில இந்திய தலைவர் C.குப்புசாமி Ex.MP அவர்களின் மறைவிற்கு வருந்துகிறோம்- - - - - -
நமது கூட்டணியில் அங்கம் வகிக்கும் TEPU சங்கத்தின் அகில இந்திய தலைவரும், மூத்த தொழிற்சங்க தலைவருமான C.குப்புசாமி Ex.MP அவர்கள் 19.04.2013 அன்று இரவு மரணமடைந்தார், அவருக்கு நமது மாநில சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்துடன் அஞ்சலி செலுத்துகிறோம்.
|
|